அன்புள்ள தமிழ் பெருமக்களே,முதலில் ஒரு சின்ன முகவுரை: டிஸ்கி தகுதரம், யூனிகோட் தரம் இரண்டும் ஒன்றல்ல. ஆயின் யூனிகோட் சார்ந்த டிஸ்கி எழுத்துருக்கள் இருப்பின் யூனிகோட் பக்கங்களையும், டிஸ்கி பக்கங்களையும் ஒரு சேர படிக்க இயலும். உதாரணமாக, tsc என்று துவங்கும் தமிழ் எழுத்துருக்கள் டிஸ்கி வகையெனவும், tscu என துவங்கும் தமிழ் எழுத்துருக்கள் டிஸ்கி/யுனிகோட் வகையெனவும் சாதாரணமாய் அறிக.இணையத் தமிழ்நன்மக்களுக்கு பயனாகும் வகையில்:-(1) டிஸ்கி தகு தரத்தில் (tscii) டிஸ்கி எழுத்துரு கொண்டு உருவாக்கப்பட்ட இணைய பக்கங்களை இணைய உலாவிகளில் (web browsers) பார்க்கவும்,(2) யாஹு குழும மடல்களில் உள்ளீடு செய்த டிஸ்கி எழுத்துரு வடிவ மடல்களை படிக்கவும், நாமும் அதே போல் உள்ளீடு செய்யவும்,(3) அவுட்லுக் மற்றும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மடற் செயலிகளில் டிஸ்கி தகுதர எழுத்துரு மடல்களை படிக்கவும்/உள்ளீடு செய்யவும்,(4) மேலும் யாஹூ தூதுவரில் டிஸ்கி தகுதர எழுத்துருக்களை பயன்படுத்தவும்,இந்த விளக்கத்தினை இணையத் தமிழ் மக்களின் பயனுக்காக அளிக்கிறேன். சொல்வதில் ஏதேனும் தவறிருப்பின் அது எனது அறிவுக்குறைவேயன்றி, டிஸ்கி/ யுனிகோட் தரத்தினாலல்ல.NB: Typing in Tamil in pop3 mails, yahoo group mails and in Yahoo messenger through ekalappai software is common, so it is explained in the last.(1) டிஸ்கி எழுத்துருவால் உருவான இணைய பக்கம் பார்ப்பதற்கு:உங்களிடம் ஏற்கனவே ஒரு டிஸ்கி தகுதர எழுத்துரு இல்லாவிடில், முதலில், http://www.tamil.net/newtamil/ekalappai_1.html என்னும் வலைய தளத்திற்க்குச் சென்று, முததில் ஏகலப்பை (ekalappai.exe) என்னும் செயலியை இணையிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவுங்கள். அச்செயலியை உருவாக்கியவர்கள், தமிழ் எறும்புகள். ஏகலப்பை உங்கள் கணினியில் ஒரு கீமேன் தமிழ் தட்டச்சு விசைப்பலகை மென்பொருளையும் (phonetic tamil keyboard software) இரண்டு டிஸ்கி தகுதர தமிழ் எழுத்துருக்களையும் நிறுவும். அந்த எழுத்துருக்கள் பெயர்கள் வருமாறு:1. tsc_avarangal (tscava.ttf)2. tsc_avarangalfxd (tscavaf.ttf)இப்போது உங்கள் கணினியில் டிஸ்கி எழுத்துரு வந்த்துவிட்டது. டிஸ்கி இணைய தளத்தை தமிழில் காண, முதலில்:6. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோர் குறுக்குவழி குறுவடிவை (short cut icon) அல்லது கண்ட்ரோல் பேனலில் இருக்கும் வலைய தேர்வு குறுவடிவை (internet options icon), இதில் ஏதேனும் ஒன்றினை சுட்டியின் மூலம் தேர்ந்தெடுத்து(select through mouse), சுட்டியால் வலது பித்தானை சொடுக்கி வரும் கீழிறக்கு பட்டியலில்(dropdown menu), ப்ராப்பர்ட்டியை சொடுக்கினால், ஒரு தனி சாளரம் தோன்றும்; அதில் பொது கட்டத்தின் (general tab) கீழுள்ள எழுத்துரு பித்தானை (font button) சொடுக்கவும்.7. உடனே தோன்றும் இன்னொரு தனி சாளரத்தில் மேலாக உள்ள லாங்க்வேஜ் ஸ்கிரிப்ட் செலக்ட் மெனுவில், இலத்தீன் பேஸ்டு (latin based) தேர்ந்தெடுத்து, பின் கீழே வெப் பேஜ் எழுத்துருவாக(web font) டிஎஸ்ஸி ஆவாரங்களையும், ப்ளெயின் டெக்ஸ்ட் எழுத்துருவாக (plan text font) ஆவாரங்கள் ஃபிக்ஸ்டையும் தெரிவுசெய்து, தேர்வை பத்திரப் படுத்தவும். திரும்பவும் முன்போலவே செய்து, இப்போது வரிசையாக லாங்க்வேஜ் ஸ்கிரிப்டாக, தமிழையும்(tamil), யுஸர் டி ஃபைண்டையும் (user defined)தெரிவு செய்து, முன்போலவே டிஎஸ்ஸி எழுத்துருக்களை தேர்ந்த்தெடுத்து தேர்வை பத்திரப் படுத்தவும். (select and click OK)8. கடைசியாக அதே இண்டர்னெட் ப்ராப்பர்ட்டீஸ் சாளரத்தில் கீழே மொழிப் பித்தானை (language button) சொடுக்கி வரும் தனி சாளரத்தில், சேர் பித்தானை (add button) அழுத்தி, தமிழ் மொழியை தெரிவு செய்யவும், பின் எல்லாத் தேர்வுகளையும் பத்திரப் படுத்தவும்(save all by clicking OK in all popup windows). அவ்வளவே!NB: விவரங்களுக்கு : http://www.ppaplan.org/view.html , http://ppaplan.org/tamil.htmlபார்க்கவும்.(2) யாஹூ தூதுவரில் பிறர் அச்சடிக்கும் டிஸ்கி தகுதர எழுத்தை படிக்க:மேலே சொன்னது போலவே யாஹூ மெஸன்ஞ்சரின் ப்ரிஃபரன்ஸில், அப்பியரன்ஸ் முன்பாக இரு இடங்களில் டிஎஸ்ஸி எழுத்துருவை தேர்தெடுத்து பின் நீங்கள் தேர்ந்த எழுத்துருக்களே உங்களுடைய வரையறை எழுத்துருக்களாக இருக்கும்படி (use your own fonts and colors) இருக்கின்ற செக் பாக்ஸை டிக் செய்து, அனைத்துத் தேர்வுகளையும் பத்திரப்படுத்தவும். அவ்வளவே. இனி யார் டிஸ்கியில் அச்சடித்தாலும் உங்களால், மெஸெஞ்சரிலும், பொது அறைகளிலும், தமிழில் படிக்க முடியும்.(3) பாப்3 மடற் செயலிகளில் டிஸ்கி தகுதர எழுத்துக்களை படிக்க:(It is presumed that you are using outlook express 6)முதலில் அவுட்லுக் எக்ஸ்ப்ரஸை திறக்கவும். பின் மேலாக இருக்கும் டூல்ஸ் இறங்கு பட்டியலில் (tools drop down menu) விருப்புகளை(options) சொடுக்கி, வரும் தனிச் சாளரத்தில், முறையே "படி"மற்றும் "தொகுப்பு"வரிசைகளின் கீழ் (under the read and compose tabs) உங்களுடைய வரையறை எழுத்துருவாக(default font) டிஎஸ்ஸி_ஆவாரங்கள் மற்றும் சாதாரண எழுத்து எழுத்துருவாக (plan text font)டிஎஸ்ஸி_ஆவாரங்கள் ஃபிக்ஸ்டை தெரிவு செய்து பத்திரப்படுத்தவும். அவ்வளவே.(4) டிஸ்கி தகுதர தமிழில், பேசு வகை கீமேன் அச்சடிப்பு விசைப்பலகையில் அச்சடிப்பது எப்படி?(How to type in tsc tamil using phonetic keyman keyboard?)ஏகலப்பை ஃபோனடிக் விசைப்பலகை மென்பொருளைக் கொண்டு, டிஎஸ்ஸி தகுதர தமிழ் எழுத்துருவால் தமிழில் அச்சடிப்பது வெகு சுலபம். தமிழ்த் தட்டச்சு தெரியவேண்டிய அவசியமேயில்லை. அந்த மென்பொருளால் ammaa என்று உங்கள் ஆங்கில விசைப்பலகையில் அச்சடிப்பின் அது "அம்மா"எனவும் vaigai "வைகை"எனவும் அச்சடிக்கலாம். இப்போது வழிமுறை:-ஏகலப்பை நிறுவியவுடன், உங்கள் கணினியில் டிஎஸ்ஸி எழுத்துருக்கள் நிறுவப்பட்டுவிடும். கூடவே "K"என்ற குறியீட்டுடன், "தமிழ்"என்ற ஷார்ட்கட் உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கக் காணலாம். அதனை இருமுறை சொடுக்கினால், அது உடனே உங்கள் டாஸ்க் பாருக்கு வந்துவிடும். இப்போ உங்கள் விசைப் பலகையில் அல்ட் + 2 ஒரு சேர இயக்கினால், அந்த டாஸ்க் பார் இகான் "அ"என மாறக்காணலாம். இப்போ kadavuLE என்று அச்சடித்தால் அது "கடவுளே"என்று வரும். திரும்ப ஆங்கிலம் தட்டச்ச, அல்ட் + 1. அவ்வளவே. ஏகலப்பை உதவி ஆவணத்தை நன்றாக வாசித்தால், எல்லாமே சுலபம்.மேற்கூறிய வழியில் யாஹூ தூதுவரிலும் (Yahoo Messenger), குறிப்பேட்டிலும் (Note pad), எழுத்தேட்டிலும்(Word pad), சொற்செயலியிலும்(Word Processer), விரித்தாளிலும்(Spread sheet), தரவுதளத்திலும்(Data base), எச்.டி.எம்.எல் திகுப்பாளரிலும்(HTML editor) டிஎஸ்ஸி எழுத்துருவை உள்ளீட பயன்படுத்தலாம். இதே வகையில்,நான் கூறியது வெறும் சைகை விளக்கமே. தமிழை தேடி நீங்கள் அடைவதே மிகப் பெரும் இன்பம். பின்வரும் வலைய இணைப்புகள்/ இணையதளங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.:
01 http://thamizha.com/downloads
02 http://www.puducherry.com/thamizha.html
03 http://www.tavultesoft.com/keyman
04 http://www.pudhucherry.com/uni.html
05 http://www.pudhucherry.com/tscii.html
06 http://www.maraththadi.com
07 http://groups.google.com/group/santhavasantham
08 http://groups.google.com/group/anbudan
09 http://www.nalinam.com
10 http://www.murasu.com
11 http://www.suratha.com/reader.html
Wednesday, October 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
hi
hi thyaga!!!
chk this out for typing in tamil
http://quillpad.in/tamil
it is very useful for writing and publishing articles online.
i guess since you are into tamil writing it will help you
you nned not downlaod anything
independent of machine
no keyboard layout has to be memorised
I like ur mugavurai its happy to learn from u. I m new to Tamil blogs and writing. I need your wishes and regards always. Learning makes a man perfect. thank u
Bhagavathy
check this also http://tamilparks.50webs.com/tamil.html
ஆன்லைனில் தமிழ் படிக்க வசதி
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=4823&Country_name=America&cat=new
செய்தி!!!...........
www.Go4Guru.com
ஆன்லைனில் தமிழ் படிக்க வசதி...
உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்றுக்கொள்ள, அமெரிக்க விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஐயா வணக்கம்!
இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_8.html
Post a Comment